ரசிகர்களை குழப்பிவிட்ட தனுஷ்..!


மாஸான நியூஸ் ஒன்றை விரைவில் அறிவிக்கிறேன் என தனுஷ் டிவிட்டரில் கொளுத்தி போட்டாலும் போட்டார், அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலகை சேர்ந்த சிலர் கூட அது என்னவாக இருக்கும் என ஆளாளுக்கு தலையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார்களாம்.

ஏற்கனவே ரஜினியை வைத்து படம் தயாரிக்கப்போவது தெரியும்.. அதைவிட அல்லது அதுக்கு ஈக்குவளாக இன்னொரு மாஸ் நியூஸ் சொல்லப்போகிறார் என்றால் அனேகமாக அது விஜய் பற்றிய நியூசாகத்தான் இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள் அவரது ரசிகர்கள்..

ஏற்கனவே விஜய் படத்தை இயக்குவதாக செல்வராகன் கதை சொல்லி செல்வராகவன் ஒகே வாங்கியிருக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன்பே சொல்லப்பட்டது.. சமீபத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனுஷின் ‘கொடி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.. இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் தனது தயாரிப்பில் தனது அண்ணன் செல்வராகவன் டைரக்சனில் விஜய் நடிக்கும் படத்தை அறிவிப்பார் என்கிற ரேஞ்சுக்குத்தான் பேசிக்கொள்கிறார்கள்..

அவரது அறிவிப்பு அணுகுண்டாக இருக்குமா..? இல்லை புஸ்வாணமாக போகுமா என பொறுத்திருந்து பார்ப்போம்..