சிவகார்த்திகேயன் வேண்டாம்; விஜய் சேதுபதியை தத்தெடுத்த தனுஷ்.!

vijaysethupathy_sivakarthikeyan

சினிமாவுக்கு வர்ற புதுமுக நடிகரின் ஒரு படம் ஓடிவிட்டால் அவரை கையிலேயே பிடிக்க முடியாது, அடுத்த படத்தில் எனக்கு த்ரிஷா, நயன்தாரா தான் ஜோடி என்ற அளவுக்கு பில்டப் கொடுத்து அவர்களின் சினிமா வாழ்க்கைக்கு அவர்களே சூனியம் வைத்துக் கொள்வார்கள், இங்கேயும் அப்படித்தான் சிவகார்த்திகேயனும் அவரின் படங்கள் ஹாட்ரிக் வெற்றியை அடைந்தவுடன் எனக்கு அனுஷ்கா, நயன்தாரா தான் இனிமே ஜோடியா வேண்டும் என்று கட்டளை போட்டதாக கூறப்படுகிறது. தம்பி நீ இன்னும் வளரனும் என்று வந்த தயாரிப்பாளர்கள் அனைவரும் அவரின் வீட்டு கேட்டுக்கு சீல் வைத்துவிட்டு சென்றதாக தகவல்கள் கூறப்படுகிறது.

இது எப்படியோ தனுஷ் காதுக்கு செல்ல அவர் இனி சிவகார்த்திகேயனை நம்ம வளர்த்துவிட வேண்டாம் அவனே வளர்ந்து நல்ல இடத்துக்கு வந்திடுவான், அடுத்து விஜய் சேதுபதியை பிடித்து அவரை வைத்து நான் படத்தை தயாரிக்கிறேன் என்ற முடிவுக்கு வந்தபின் தான் தனுஷின் தயாரிப்பில் “நானும் ரவுடி தான்” என்ற புதிய படத்தில் விஜய் சேதுபதியை ஹிரோவாகவும், நயன்தாராவை ஹிரோயினாகவும் நியமித்திருக்கிறார் தனுஷ்… இப்படி ஒரு ஹிரோ கம் தயாரிப்பாளர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் தான்…