சாய்பல்லவிக்காக ‘கரு’ நாயகனை இருட்டடிப்பு செய்கிறாரா இயக்குனர் விஜய்..?


தற்போதுதான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘கரு’ என்கிற தமிழ்படத்தில் முதன்முதலாக நடித்துள்ளார் சாய்பல்லவி. ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தயாராகும் இந்தப்படத்தில் நாயகனாக நாக சவுர்யா என்பவர் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நாயகன் நாக சவுர்யா லண்டனில் இருப்பதால் கலந்துகொள்ளவில்லை என சொல்லப்பட்டது..

இந்தப்படத்தில் நடித்தபோது சாய் பல்லவி செட்டில் ஓவர் பந்தா காட்டியதாகவும் தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களில் கூட அடாவடியாக நடந்து கொண்டதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் நாக சவுர்யா.

ஆனால் கரு பட விழாவில் பேசிய சாய் பல்லவியோ “நாக சவுர்யா மிக திறமையான நடிகர். அவர் இப்படி சொன்னது ஏன் என தெரியவில்லை இனி அவர் என்னைப்பற்றி நல்ல அபிப்ராயம் கொள்வார் என நம்புகிறேன்” அவரைப்பற்றி உயர்வாகவே பேசினார் சாய்பல்லவி.

அடடே இப்படி நல்லவிதமாக பேசும் சாய் பல்லவியையா அந்த ஹீரோ தப்பாக பேசினார் என உடனே கோபப்பட்டு விடவேண்டாம். சாய் பல்லவி மீது தவறு இல்லாமலேயே இருக்கலாம். ஆனால் சாய் பல்லவியை நாயகன் திட்டியதாலும் படப்பிடிப்பில் சில தொல்லைகள் கொடுத்ததாலும் விஜய் சைலன்ட்டாக நாக சவுர்யாவை இருட்டடிப்பு செய்து வருகிறார் என்றே சொல்லப்படுகிறது..

சாய் பல்லவிக்கு மட்டுமே தமிழில் மார்க்கெட், வரவேற்பு இருப்பதால், ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லை என்கிற போர்வையில் நாக சவுர்யா சம்பந்தப்ப ‘கரு’ படத்தின் புகைப்படங்கள் போஸ்டர்கள் எதுவுமே மீடியாவுக்கு வழங்கவேண்டாம் என மறைமுக உத்தரவு போட்டுவிட்டாராம் இயக்குனர் விஜய்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *