நடிகர் மற்றும் இயக்குநர் விசு உடல்நலக்குறைவால் இன்று காலமானார்


1941-ம் ஆண்டு பிறந்த விசு, திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் மிகவும் பிரபலமானதாகும். பெரும்பாலான இந்திய மொழிகளில் இந்தப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.

கடைசியாக 2013-ம் ஆண்டு வெளியான அலெக்ஸ்பாண்டியன் படத்தில் விசு, நடித்திருந்தார். சமீப காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மரணமடைந்தார்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *