காக்கி சட்டை படத்தின் ரகசியம்…!!!!!

முதல்முறையாக சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் திரைப்படம் “காக்கி சட்டை”, இப்படம் உருவாவதற்கு “சீக்ரெட்” என்ற புத்தகமே மிக முக்கிய காரணம் என்று அந்த படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் கூறுகிறார்.

மேலும் அந்த புத்தகத்தை இயக்குனர் வெற்றிமாறன் தனக்கு அளித்ததாகவும், ” நாம் எதனை சாதிக்க நினைகிறோமோ அதை பற்றி 24/7 நினைக்கவும் அதை நோக்கி நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும்” என்றும் அதில் குறிப்பிட்டிருப்பதாக கூறினார்.

அதோடு “எதிர்நீச்சல்” படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைவதற்கு மிகவும் சந்தோஷம் அடைவதோடு, படத்தில் தனக்கு முழு சுதந்திரம் அளித்ததற்காக தயாரிப்பாளர் தனுஷ் அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார் இயக்குனர் துரை செந்தில்குமார்.