டி.எஸ்.பியை கழட்டி விட்ட ஹரி மீண்டும் ஹாரிஸுடன் கூட்டணி..!


‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமான S-IIIஐ ,மிரட்டலான பர்ஸ்ட் லுக்குடன் அறிவித்து, படப்பிடிப்பையும் தொடங்கி விட்டார் இயக்குனர் ஹரி.. படத்தின் போஸ்டரில் இசையமைப்பாளர் பெயராக ஹாரிஸ் ஜெயராஜின் பெயர் இடம்பெற்றதை பார்த்தவர்களுக்கு ஷாக்காகத்தான் இருந்திருக்கும்.

ஒன்று கடந்த 12 வருடமாக பிரிந்திருந்த இந்த கூட்டணி மீண்டும் சேர்ந்துள்ளதே என்கிற ஆச்சர்ய ஷாக்.. இன்னொன்று பிரிக்கமுடியாத சிங்க கூட்டணியாக இருந்த ஹரி-டி.எஸ்.பி கூட்டணி பிரிந்துவிட்டதே என்கிற அதிர்ச்சி ஷாக்.

சிங்கம் படத்தின் இரண்டு பாகங்களுக்கு இசையமைத்தாலும் கூட தேவிஸ்ரீ பிரசாத் ஹரியின் ‘பூஜை’ படத்துக்கும் கூட இசையமைக்கவில்லை என்பதை கவனித்தீர்களா..? காரணம் டி.எஸ்.பியின் மனம் தற்போது நடிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது..

அப்படி ஒரு ஆளை வைத்துக்கொண்டு ட்ராவல் பண்ணுவது கஷ்டம் என்பதால் தான் ஹரி ஒதுங்கி விட்டாராம்.. சரி.. ஹாரிஸுடன் எப்படி மீண்டும் ஜோடி சேர்ந்தாராம் என்றால் அது ஹாரிஸின் மனைவியும் ஹரியின் மனைவி பிரீத்தாவும் செம க்ளோஸ் என்பதால் மீண்டும் இந்த கூட்டணியை உருவாக்க முனைப்பு காட்டியுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.