இயக்குனர் பாண்டிராஜிடம் ‘அந்த’ மாதிரி கதை சொன்ன உதவி இயக்குனர்..!


‘எங்கிட்ட மோதாதே’ படத்தில் சதுரங்க வேட்டை’ நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.. பாண்டிராஜ், செல்வராகவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த ராமு செல்லப்பா என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். ஈராஸ் நிறுவனம் வெளியிடும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

ராமு செல்லப்பா என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு, பின்னர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக சேர்ந்து அதன் பின்னர் என்னிடம் வந்து ‘சியர்ஸ்’ என்னும் தலைப்பில் கதை சொன்னார். அதை என்னை தயாரிக்கவும் சொன்னார். ஆனால் அதை நான் மறுத்துவிட்டேன், ஏனென்றால் அப்படத்தின் கதை அப்படி அந்த படம் யு/ஏ வகையறா கதை கூட இல்லை அது ஒரு “ஏ ஏ ஏ “ வகையை சேர்ந்த கதை.

எங்க இருந்து இந்த மாதிரி கதையெல்லாம் பிடிச்ச என்று நான் அவனிடம் கேட்டேன். அதற்கு அவன் இது என்னுடைய நண்பரின் கதை இதில் நானும் சம்பந்தபட்டிருக்கிறேன் என்றான். அவனிடம் இதை தயாரிக்க முடியாது என்றதும் வெகுநாட்கள் கழித்து வேறு ஒரு கதை எழுதி இருக்கிறேன் இந்த கதை சுப்பிரமணியபுரம் போல இருக்கும் என்று கூறினான். அது தான் ‘எங்கிட்ட மோதாதே“ என தனது சிஷ்யன் ராமு செல்லப்பா ‘பிட்’டுக்கு கதை எழுதிய வண்டவாளங்களை பாண்டிராஜ் அவிழ்த்துவிட, ராமு செல்லப்பா மேடையிலேயே நெளிந்தார்.