விஜய்சேதுபதி அதுக்கு சரிப்பட்டு வருவாரா..?


நடிகர்கள் பெண் வேடத்தில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல.. சிலர் ஒரு காட்சியோடு நிறுத்தி விடுவார்கள்.. சிலர் படம் முழுவதும் ‘பெண்’ணாகவே வருவார்கள். ‘ஆணழகன்’ பிரசாந்த், அவ்வை சண்முகியில் கமல்ஹாசன், ரெமோவில் சிவகார்த்திகேயன் ஆகியோர் பெண் வேடமிட்டு நடித்தாலும் வயதான பெண் வேடத்தில் கமலும், இளம்பெண் வேடத்தில் சிவகார்த்திகேயனும் தான் முதல் மார்க் வாங்கியுள்ளார்கள்..

இந்நிலையில் விஜய்சேதுபதியும் பெண் வேடமிட்டு நடிக்கிறாராம். ஆரண்ய காண்டம்’ படப்புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. அந்தப்படத்தில் தான் பெண் வேடத்தில் நடிக்கிறாராம். சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு காட்சியில் மட்டும் அப்படி நடிக்கிறாரா, இல்லை படம் முழுவதும் என்பது தெரியவில்லை. விஜய்சேதுபதிக்கு பெண் வேடம் என்பதை உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா..?