டைட்டிலில் குழப்பம் விளைவிக்கிறாரா நலன் குமாரசாமி…?


‘சூது கவ்வும்’ என்கிற வெற்றிப்படத்திற்கு பிறகு விஜய்சேதுபதி, மடோனா செபஸ்டியன், சமுத்திரகனி நடிப்பில் ‘காதலும் கடந்துபோகும்’ படத்தை இயக்கியுள்ளார் நலன் குமாரசாமி. இப்படத்தின் தலைப்பை சுருக்கி ‘கககபோ’ என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் டீஸரில் குறிப்பிட்டனர்.. இது அவரது சூது கவ்வும் படத்தின் மூலம் பேமஸான வார்த்தை தான்.

ஆனால் தற்போது அந்த டைட்டிலுக்குதான் சர்ச்சை கிளம்பியுள்ளது. காரணம் ஏற்கனவே விஜய் என்பவர் இயக்கத்தில் கககபோ என்ற தலைப்பில் ஒரு படம் முடிந்து ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கும் வேளையில், விஜய்சேதுபதி படத்துக்கும் அதே பெயரை வைத்து குறிப்பிடுவதாக அப்படத்தின் இயக்குநர் மீடியாக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், நான் ‘க க க போ’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். படம் தற்பொழுது வெளியீட்டிற்கு தயார்நிலையில் உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் காதலும் கடந்து போகும் திரைப்படத்திற்கும் க க க போ என பெயரிட்டு விளம்பரம் செய்கிறார்கள், இது எங்கள் திரைப்பட தலைப்பிற்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.