ஸ்டெர்லைட் வன்முறை குறித்து மாற்றி மாற்றி பேசுகிறாரா ரஜினி..?


கடந்த வாரம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியில், போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டனர்.. இதுகுறித்து அப்போது, “மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு’’ என்று கண்டனம் தெரிவித்திருந்தார் ரஜினி.

இந்தநிலையில் இன்று தூத்துக்குடி சென்று விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினி செய்தியாளர்களிடம் பேசும்போது, “சமூக விரோதிகள் தான் இதற்கு காரணம்.. அவர்கள் போலீசை தாக்கியதால் தான் பிரசனை வெடித்ததது. போலீசாரை தாக்குவதை நான் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என கூறினார்..

ஆரம்பத்தில் போலீசாரின் மிருகத்தனமான செயலை என கண்டித்த ரஜினி, இப்போது சமூக விரோதிகள் தான் காரணம் என மாற்றி பேச என்ன கரணம் என பலரும் குழம்பியுள்ளனர்.. ஆனால் அவரது ரசிகர்களோ ராஜின் இ மாற்றி எல்லாம் பேசவில்லை… போலீசின் துப்பாக்கிசூடு மிருகத்தனமானது என சொன்னதும் உண்மைதான்..அதை நியாயப்படுத்தவில்லை அதேசமயம் போலீஸை தாக்கியது சமூக விரோதிகள் என சொன்னதும் உண்மைதான்.. அதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் என்கிற எண்ணத்தில் தனது கருத்தை ஆணித்ததாரமாக கூறியுள்ளார் என்கிறார்கள்.