வெளியான கொஞ்ச நேரத்திலேயே ‘பென்சில்’ ட்ரெய்லரை முடக்கிய ‘ஈராஸ்’ நிறுவனம்..!


ஜி.வி.பிரகாஷ் முதன்முதலாக கதாநாயகனாக ஆசைப்பட்டு நடித்தாரே ‘பென்சில்’ படம் அதை ஞாபகம் இருக்கிறதா..? அதன்பின் அவர் நடித்த டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என இரண்டு படங்கள் அவரை ஹீரோவாக வெளிக்கொண்டு வந்துவிட்டன. அப்படின்னா ‘பென்சில்’ படம் அவ்வளவுதானா என படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் தவிர மற்ற அனைவரும் வருத்தப்பட்டனர்.

ஆனால் அந்த பென்சிலுக்கு இப்போது சாப விமோசனம் கிடைத்து ரிலீசாகும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருகட்டமாகத்தான் இந்தப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ட்ரெய்லரை இன்று மாலை சூர்யா வெளியிட்டார். ஜி.வி.பிரகாஷ் தான் இதற்கு இசையமைத்தும் இருக்கிறார்.

இந்த தகவலை கேள்விப்பட்டு படத்தின் ட்ரெய்லரை யூ டியூப்பில் பார்க்க வந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. ஆம்.. கிட்டத்தட்ட 1445 பேர் மட்டுமே இந்தப்படத்தின் ட்ரெய்லரை பார்த்துள்ள நிலையில், இதை ஈராஸ் நிறுவனம் காப்பிரைட் உரிமை அடிப்படையில் முடக்கிவைத்துள்ளது.. இதன் பின்னணி என பலரும் பலவாறாக குழம்பி வருகிறார்கள்..

காரணம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் பாடல் ரைட்ஸை ஈராஸ் மியூசிக் தான் கைப்பற்றி இருந்தது.. ஆனால் தமிழுக்கான ரைட்சும் அவர்களிடம் கொடுக்கப்பட்டதா என்பது தான் குழப்பமாக இருக்கிறது.

அப்படி கொடுக்கப்பட்டிருந்தால் அவர்களே ட்ரெய்லரை முடக்கவேண்டிய அவசியம் இல்லை தான்.. போஸ்டரில் கூட தமிழில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றாகவும் தெலுங்கில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றாகவும் இருக்கிறது. ஆனால் இது அவ்வபோது டெக்னிக்கல் பிரச்சனையால் கூட ஏற்படுவதுண்டு.. தெறி’ படத்தின் ட்ரெய்லருக்கு கூட இப்படித்தான் ஆச்சு என்றும் சொல்கிறார்கள்.. எப்படி இருந்தாலும் எதனால் இது முடக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை விரைவில் எதிர்பார்ப்போம்.