சூப்பர்ஸ்டாரின் புதிய படத்தில் நடிக்கும் பிரபல நடிகை!


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு திரைக்கு உள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. பாடல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தர்பார் படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தின் ஆரம்ப கட்டப்பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முதலில் இப்படத்திற்கு இமான் இசை அமைக்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர். அடுத்ததாக சூரி படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது தலைவர் 168 படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகை கீர்த்திசுரேஷ் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.