வெற்றிமாறனின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல தயாரிப்பாளர்

பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அசுரன்.

தனுஷ் மற்றும் மஞ்சுவாரியர் நடித்துள்ள இப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் வெற்றி மாறன் அடுத்ததாக இயக்க உள்ள புதிய திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளார். ஆர். எஸ். இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ள இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்பட உள்ளது.