சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவரின் மூக்கை உடைத்த சந்தானம்..!


சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர்கள் 10 பேர் குடும்பத்துடன் பயணித்தனர். இவர்கள் பயணித்த அதே முன்பதிவு பெட்டியில் சென்னை பெசன்ட்நகரைச் சேர்ந்த 57 வயது வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவரும் கோவையில் ஏறியுள்ளார். ரயிலில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, சென்னை பயணிகளுடன் வந்த 9 வயது சிறுமியிடம் பிரேம் ஆனந்த் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

அந்தக் குழந்தை கத்தி பெற்றோரை எழுப்பியதும், உடனடியாக ரயில் ஈரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. பிரேம் ஆனந்த், தான் வழக்கறிஞர் என்றும், பிஜேபியில் பெரிய தலைவர் என்றும், ஆர்எஸ்எஸ்ஸில் பெரிய தலைவர்களைத் தெரியும் என்றும் பெற்றோரை மிரட்டியுள்ளார். ஆனால் காவல்துறையினர் உடனடியாக அவரை பாஸ்கோ சட்டத்தில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தற்போது இவரைப்பற்றி சுவாரஸ்யமான செய்தி ஒன்று தெரியவந்துள்ளது. அதாவது கடந்த வருடம் வளவசரவாக்கத்தில் திருமண மண்டபம் கட்டிகொடுப்பதில் காமெடி நடிகர் சந்தானத்துக்கும் காண்ட்ராக்டர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நிறுவனத்துக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஒருவர் குறுக்கே வந்து பேசியுள்ளார்.

இதன் காரணமாக சந்தானத்துக்கும் அந்த வழக்கறிஞருக்கும் கைகலப்பு ஏற்பட்டு, சந்தானம் வழக்கறிஞரின் முகத்தில் செம குத்து குத்தினார். சந்தானத்துக்கு கராத்தே தெரியும். அதன் காரணமாக அவர் கராத்தே பாணியில் தாக்குதல் நடத்தியதால், வழக்கறிஞரின் மூக்கு உடைந்து ரத்தம் தக்காளி சட்டினி போல கொட்டியது.

அந்த வழக்கறிஞர் வேறு யாருமல்ல.. இதோ இப்போது சிறுமி வழக்கில் சிக்கியிருக்கிறானே இந்த பிரேம்குமார் தான். சந்தானம் இவனை குத்துவிட்டு மூக்கை உடைத்தது சரிதான் என சோஷியல் மீடியாவில் பலரும் சந்தானத்தை பாராட்டி வருகின்றனர்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *