ஜி.வி. பிரகாஷ்குமார் – கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் புதிய படம்


இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன் இணைந்து நடிக்க உள்ளனர்.

முதல்முறையாக ஜி.வி.பிரகாசுடன் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்சன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்ஷன் என முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராக இருக்கிறது.

இத்திரைப்படத்தை கே புரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்கின்றார்.

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார்.

இவர் சீமதுரை, 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *