முத்தம் கொடுக்க 36 டேக் : காதல் இளவரசனாக மாறத்துடிக்கும் ஜி.வி.பிரகாஷ்..!

காதல் காட்சிகளில், குறிப்பாக முத்தக்காட்சிகளில் டாக்டரேட் பட்டம் வாங்கிய நடிகர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டார் ஜி.வி.பிரகாஷ். ஆம் நடித்த இரண்டாவது படத்திலேயே லிப் டூ லிப் கிஸ்ஸிங் காட்சியில் நடித்துள்ளார்.. அதுவே ஆச்சர்யமான் விஷயம்..

ஆனால் இந்த முத்தக்காட்சியில் நடிக்க 36 டேக்குகள் வாங்கி, உலக நாயகன் கமலுக்கே சவால் விட்டு இருக்கிறார் என்பதுதான் இந்த முத்தக்காட்சியின் வீரியத்தை பறைசாற்றுவதாக இருக்கிறது. இந்த முத்தக்காட்சிக்கு ஜி.வி.பிரகாஷிடம் இரையானவர் வழக்கு என் மனிஷா யாதவ்.. அவருக்கு எப்படியாவது மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துவிடவேண்டும் என்கிற துடிப்பு..

அதனால் இயக்குனர் ஆதிக் இந்த லிப் லாக் காட்சியைப்பற்றி சொன்னதும் ‘நோ ப்ராப்ளம்’ என மறுப்பேதும் சொல்லாமல் உடனே தயாராகிவிட்டாராம். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர்கூட, இந்தப்படத்தின் கதை மிகவும் கேடுகெட்ட கேவலமான கதை என்று சொல்லியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது…