சூர்யாவின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்


நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் “சூரரைப் போற்று”. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பின்னணி இசை கோர்ப்பு பணியில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ஏர்டெக்கான் நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வில் நடந்த சில முக்கியமான சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாகவும், ஜாக்கி ஷெராப் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

”சூரரைப் போற்று” படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.