படம் துவங்குவதற்கு முன்பே சூர்யாவை அதிர வைத்த ஜிவி பிரகாஷ்


ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி இவர்களெல்லாம் நடிகராக மாறிய பின்பு படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக் கொண்டார்கள். சில படங்களில் நடித்த பின்பு, அடுத்தடுத்து தங்களது படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்தார்கள். தற்போது தங்கள் நட்பு வட்டாரத்தில் தங்களை விரும்பி கேட்டுக் கொள்ளும் ந(ண்)பர்களின் படங்களுக்கு இசை அமைத்து கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் சூர்யா நடிக்கும் அவரது 38வது படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தான் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை.. ஆனால் தான் வாக்களித்தபடி படத்தின் அனைத்து பாடல்களையும் இசையமைத்து கொடுத்துவிட்டாராம் ஜிவி பிரகாஷ்.

ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களின் இசையமைப்பில் தனது படங்கள் சிலமுறை தாமதமானதை உணர்ந்திருந்த சூர்யா, ஜிவி.பிரகாஷின் இந்த அதிரடியால் அசந்துபோய் இருக்கிறாராம்

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *