பப்ளிசிட்டியை மட்டும் டார்கெட் பண்ணும் ஜி.வி.பிரகாஷ்..?


மிகப்பெரிய நடிகர்களே மக்களை பாதிக்கும் பொது பிரச்சனையில் எதுக்குடா வம்பு என மவுனம் காக்கும் சூழலில் ஜல்லிக்கட்டு ஆதரவு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு என லைட்டாக அரசியல் பார்டரிலும் புகுந்து விளையாடி வருகிறார் ஜி.வி.பிரகாஷ்..

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஆதரவாளர்களை உசுப்பேற்றும் விதமாக பாட்டு போட்டார் ஹிப் ஹாப் ஆதி.. ஆனால் அந்த போராட்டத்தின் க்ளைமாக்ஸில் துரோகி என்ற பட்டத்தை நெஞ்சில் சுமந்துகொண்டுதான் அவரால் வெளியேற முடிந்தது..

அதேபோல ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆங்காங்கே களத்திற்கே சென்று ஆதரவளித்த ஜி.வி.பிரகாஷ், இப்போது நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாக வேறு யாரும் பாட்டு போடும் முன்னர், தானே ‘தியாகம் செய்வோம் வா’ என ஒரு பாடலை தயார் செய்துள்ளார்..

ஆனால் ஹிப் ஹாப் ஆதி போல தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்ள விரும்பாத ஜி.வி.பிரகாஷ், ஜஸ்ட் லைக் தட் பப்ளிசிட்டியை மட்டும் அள்ளிக்கொண்டு ஒதுங்கவே விரும்புகிறாராம்.. இல்லையென்றால் ‘தியாகம் செய்வோம் வா’ என பாட்டு போட்ட ஜி.வி.பிரகாஷ் தற்போது ஒப்பந்தமாகி நடித்துவரும் பத்து படங்களில் ஏதாவது ஒன்றிரண்டை தியாகம் செய்யப்போகிறாரா என்ன..?