கவர்ச்சி நடிகையின் பலே திட்டம்; விட்ட இடத்தை பிடிப்பேன் என சபதம்..!

mumaith_khan_plan

டாடி மம்மி வீட்டில் இல்ல, தடை போட யாரும் இல்ல – இந்த பாடல் வரிகளை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது, இந்த பாடலில் குத்தாட்டம் போட்ட முமைத் கான் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நிறைய படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கிரங்கடித்தார். காலப்போக்கில் இவரின் சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போடும்விதமாக இவரை எந்த படத்திலும் பார்க்க முடியவில்லை.

தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் இவரை டீலில் விட்டு மும்பையிலிருந்து பல கவர்ச்சி நடிகைகளை தங்கள் படங்களுக்கு கவர்ச்சி நடனம் ஆட அழைத்து வந்தனர். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத முமைத், வீட்டில் யோகா செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். இப்படியே போனால் சரிபட்டு வராது என முடிவெடுத்து மீண்டும் சினிமா வாய்ப்பை வேட்டையாட கிளம்பிய இவரை அவரது நெருங்கிய நண்பர்கள் கூறிய அட்வைஸின் பேரில் தற்போது இவரே பாடி கவர்ச்சியில் கலக்கியிருக்கும் ஒரு பாப் ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார்.

அப்போ சீக்கிரமே மீண்டும் ஒரு டாடி மம்மி சாங் கோலிவுட்டில் ஒலிக்கப்போவது உறுதின்னு சொல்லுங்க!..

முமைத் கான் நடித்து, நடனம் ஆடி, பாடிய பாடல் உங்களுக்காக கீழே…