வடமாநிலத்தவருக்கு உள்நாட்டு விசா கொடுங்கள் ; இயக்குனர் யுரேகா கொந்தளிப்பு


மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும் ஆகிய படங்களை இயக்கியவர் பாடலாசிரியரும் இயக்குனருமான யுரேகா.. தற்போது ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். மத்திய சென்னை படத்தில் நடித்த ஜெய்வந்த் இந்தப்படத்தின் கதாநாயகனாக அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

அதிரடி போலீஸ் கதையாகவும் சைக்கோ த்ரில்லர் கதையாகவும், அதேசமயம் வடமநிலத்தவர்களின் ஊடுருவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் எப்படி பொருளாதார தாக்கம் ஏற்படுகிறது என்பதையும் மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளதாம்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய யுரேகா, “இன்று தமிழ்நாட்டில் நம்மால் தமிஸ்பேச முடிவதில்லை.. வடமாநிலத்தவர் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. சரவணபவன் ஹோட்டலில் சாம்பார் வாங்குவதற்காக அங்கே வேலைபார்க்கும் மொழி புரியாதவர்களிடம் சண்டை போட்டேன்..டோல்கேட் டில் கூட வடமாநிலத்தவன் தான் பில் போடுகிறான்.. நாம் தமிழில் பேசினால் க்யா என்கிறான் இந்தியில்.. என் தாய்த்தமிழ் ஈழத்து உறவுகளை இங்கே அகதிகளாக முகாமில் அடைத்து வைத்து ஆயிரம் கட்டப்பாடுகள் போடுகிறீர்கள்.. ஆனால் எவனோ ஒரு வடநாட்டுக்காரன் சுதந்திரமாக நம் ஊரில் சுற்றி திரிகிறான். குற்றங்கள் செய்கிறான்.

அதுமட்டுமல்ல, ஊர்விட்டு ஊர்வந்து பிழைக்க வந்த இடத்தில் காம இச்சையை தீர்க்க நம்ம ஊர் பெண்கள் மீது கைவைக்கிறான். இவர்களை எல்லாம் வரைமுறைப்படுத்த வேண்டும் என்றால் இவர்களுக்கு உள்நாட்டு விசா வழங்க வேண்டும்.. அப்போதுதான் இவர்களை கட்டுக்குள் கொண்டுவர முடியும்” என கொந்தளிப்பாக பேசினார் யுரேகா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *