ராதிகா பாணியில் விஜய்யை விமர்சித்த ஹெச்.ராஜா..!


ஒருத்தரை பிடிக்காவிட்டால் நாகரிகமாக விமர்சிப்பது ஒரு ரகம்… ரொம்பவும் தரம் குறைந்து அசிங்கமான வார்த்தைகளால் விமர்சிப்பது இன்னொரு ரகம்.. ஆனால் தேவைப்படும்போது ஒருவரை புகழ்வ்டஹு, அவரே எதிரியானால் ஜாதியை சுட்டிக்காட்டி விமர்சிப்பதும இந்த ரெண்டிலும் சேராத புது ரகம்.. நடிகை ராதிகா அந்த ரகத்தை சேர்ந்தவர்..

கடந்தமுறை நடிகர்சங்க தேர்தல் நடந்தபோது விஷாலை பிடிக்காத ராதிகா, அவரை விஷால் ரெட்டி என ஜாதிப்பெயரை சொல்லி குறிப்பிட ஆரம்பித்தார். அதற்கு முன்பெல்லாம் விஷால் என பெசிவந்தாவர் தான் அவர்.. தற்போது ராதிகாவின் பாணியில் பாஜக தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா என்பவர் ஒருபடி மேலாக போய் மதத்தின் பெயரால் நடிகர் விஜய்யை தாக்கியுள்ளார்.

தரங்குறைந்த வார்த்தைகளால் விமர்சிப்பது ஹேக்.ராஜாவுக்கு ஒன்றும் புதிதல்ல.. அதனால் தான் இப்போது மெர்சல் பட விவகாரம் குறித்து விஜய்க்கு கண்டனம் தெரிவிக்கும்போது, ஜோசப் விஜய் என விஜய்யின் மதத்தை குறிப்பிடும் விதமாக பேசியுள்ளார். இதே பாஜகவை சேர்ந்தவர்கள் தான் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது நடிகர் விஜய் மோடியை சந்தித்தபோது ஆஹா ஓஹோவென புகழ்ந்தார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.