இப்படியே போனால் இவரும் இன்னொரு சிம்பு தான்..!


சினிமாவை பொறுத்தவரை பிரபலத்தின் வாரிசாக செல்வச்செழிப்பான இடத்தில் இருந்து உள்ளே நுழைந்தாலும், இல்லே அடிமட்டத்தில் இருந்து எந்த பின்புலமும் இல்லாமல் படிப்படியாக மேலேறி வந்தவர் என்றாலும், தங்கள் தொழிலில் சின்சியாரிட்டி இல்லாமல் தான்தோன்றித்தனமாக இருப்பவர்களை சினிமா விலக்கி வைத்து விடும்.. இதற்கு கண்முன் உதாரணம் ‘பீப் பாடல்’ புகழ் சிம்பு..

இதேபோன்ற கேட்டகிரியில் இன்னொரு நபரை தேடவேண்டுமென்றால் சல்லடை போட்டு எல்லாம் சலிக்க வேண்டியது இல்லை.. இருக்கவே இருக்கிறார் நாம ஜெய் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.. இரண்டு பேருக்குமே படங்கள் இருக்கு.. ஆனா இல்லை.. வரும் ஆனா வராது என்கிற நிலைதான்.

இவர்கள் இரண்டுபேரும் இணைந்து நடித்த ‘வேட்டை மன்னன்’ படம் கொஞ்ச நாள் ஷூட்டிங்குடன் நின்றுபோனதில் இருந்தே இவர்கள் ராசிப்படி நம்பர் ஒன், டூ என அடுத்தடுத்த இடத்தில் இருப்பது நன்றாக தெரிகிறது.. இப்போது சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ வருமா வராதா என இழுப்பதுபோல ஜெய் நடித்துள்ள ‘புகழ்’ படமும் பலமுறை ரிலீஸ் தேதிகள் தள்ளிவைக்கப்பட்டு விட்டது. இத்தனைக்கும் தயாரிப்பாளர்கள் பெரிய ஆட்கள் தான் என்றாலும் ஜெய்யின் ராசி தான் இப்படி சுழன்றடிக்கிறது என்கிறார்கள்.