நிச்சயதார்த்தத்தையே ரத்து செய்து காதலை பிரித்த நடிகையின் வெற்றி


சினிமாவில் பிரபலாமாகாத நேரத்திலோ, வாய்ப்புகள் குறைவாக இருக்கும் நேரத்திலோ வலிமையாக இருக்கும் காதல், பிரபலமானவுடன், பணம் புகழ் குவிய ஆரம்பித்தவுடன் காணாமல் போவது புதிதான என்ன…? இந்த லிஸ்ட்டில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்ட்டான ‘கீதா கோவிந்தம்’ படம் நடிகை ராஷ்மியும் சேர்ந்துள்ளார்.

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்கிற படத்தில் அறிமுகமான ராஷ்மி அந்தப்படத்தில் உடன் நடித்த கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டியை காதலித்து வந்தார் ..கடந்த 2017ல் இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இந்தநிலையில் தான் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் படம் வெளியானது.

இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மி மந்தன்னாவை இந்தப்படம் உயரத்தில் தூக்கி வைத்துவிட்டது. தெலுங்கு ரசிகர்கள் ராஷ்மிக்காகவே இந்தப்படத்தை திரும்ப திரும்ப பார்க்கிறார்கள் என சொல்லப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில் இவர்களது காதலில் இப்போது விரிசல் விழுந்துள்ளதாகவும் நிச்சயதார்த்துடன் தங்களது உறவை முடித்துக்கொள்ள முடிவுசெய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. .

இரண்டு தரப்பு குடும்பத்தினருக்குள்ளும் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக இவர்கள் பிரிந்துவிட்டார்கள் என சொல்லப்பட்டு வருகிறது. ஆனாலும், தற்போது ராஷ்மிக்கு தெலுங்கில் கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக அதிகமாக பட வாய்ப்புகள் வருவதால் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம். இது ரக்ஷித் ஷெட்டிக்கு பிடிக்காமல் போகவே, அதை தொடர்ந்து இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்றே சொல்லப்படுகிறது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *