விஜய்சேதுபதியுடன் ஜி.வி.பிரகாஷை ஒப்பிடலாமா பாண்டியராஜ்..?


சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘புரூஸ்லீ’ படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் பாண்டிராஜ், இந்த வருடம் விஜய்சேதுபதி அதிக படங்களில் நடித்துள்ளார்… ஆனால் அடுத்த வருடம் நீச்சயம் விஜய்சேதுபதியை விட ஜி.வி.பிரகாஷ் அதிக படங்களில் நடித்து சாதனை செய்வார் என பாராட்டு பத்திரம் வாசித்தார்.

அதிக படங்களில் சாதனை செய்வது இருக்கட்டும்.. ஜி.வி.பிரகாஷ் நடித்த ஒரு படமாவது ஒழுங்கான படமாக இருக்கிறதா..? குடும்பத்துடன் பார்க்கும்படியாக இருக்கிறதா.? அப்படி இருக்கையில் தரமான நல்ல படங்களாக பார்த்து பார்த்து நடித்துவரும் விஜய்சேதுபதியுடன் தேவையில்லாமல் ஏன் ஒப்பிட்டு பேசுகிறார் பாண்டிராஜ் என பத்திரிகையாளர்கள் பலரும் வெளிப்படையாகவே புலம்பியதை பார்க்க முடிந்தது.