நயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..?


இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் மீண்டும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நயன்தாரா நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். இப்படத்தில் நயன்தாரா உடன் இணைந்து பிரதாப் போத்தன், பூமிகா சாவ்லா, ரோஹினி ஹட்டாங்கடி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஜூன் 14ம் தேதி வெளியாக இருந்த நிலையில், இப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல் தான் கொலையுதிர் காலம். இந்த நாவலை சுஜாதாவின் மனைவியிடம் இருந்து ரூ.10 லட்சம் ரூபாய்க்கு தனது அம்மாவின் பெயரில் விடியும் முன் புகழ் இயக்குனர் பாலாஜி குமார் வாங்கியுள்ளார். இதனால் கொலையுதிர் காலம் என்ற டைட்டிலில் படத்தை வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல். எனவே இப்படத்தை இதே டைட்டிலில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்துள்ள மனுவின் மீதுதான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலில் இப்படத்தை தயாரித்த யுவன் சங்கர் ராஜா வெளியேறினார். அடுத்து, இசையமைப்பாளராகவும் இருந்த நிலையில், படத்திலிருந்து வெளியேறினார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசினார். தொடர்ந்து தயாரிப்பாளருடன் நயன்தாராவுக்கு சம்பளம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இந்தப்படம் குறித்து மறைமுகமாக விமர்சித்ததில் வியாபாரம் மற்றும் ரிலீஸில் பின்னடைவு ஏற்பட்டது.

இதோ இப்போது எதிர்பாராத விதமாக வேறு ரூபத்தில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொலையுதிர் காலம் வெளியீடு பிரச்சனைக்கு நீதிமன்றம் ஒரு காரணமில்லை என்றும், உண்மையில், பட வியாபாரம் பிரச்சனை காரணமாகவே படம் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.