“விஜய்சேதுபதிக்கு பட்டமெல்லாம் கொடுத்து உசுப்பேத்தவில்லை” – சீனு ராமசாமி..!


வாரிசு தோரணையில் அறிமுகமாகும் ஹீரோக்களாகட்டும் அல்லது மெல்ல மெல்ல சைடு கேரக்டர்களில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் ஆகும் ஹீரோக்களாகட்டும் சில வருடங்களில் தங்களை ஒரு முன்னணி ஹீரோவாக நிலைநிறுத்திக்கொண்ட பிறகு தேடும் ஒன்றுதான் தனக்கான் பட்டம்.

அப்படி பட்டம் சூட்டுவதற்கென்றே 11 பேர் கொண்ட ரசிகர் குழு ஒன்று தயாராக இருக்கும்.. ஆனால் அப்படி பட்டம் வைத்தவர்கள் அதன் பின் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பது நம் சின்ன தளபதி நடிகரின் நிலையை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம்.

இப்போது லேட்டஸ்டாக விஜய்சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என பட்டம் சூட்டப்பட்டுள்ளது.. இதை சூட்டியவர் அவரை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமி தான். தற்போது இவர் இயக்கத்தில் ‘தர்மதுரை’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

“மக்கள் விஜய்சேதுபதி மீது வைத்திருக்கும் பாசத்தையும், மக்கள் மீது அவர் வைத்திருக்கும் அன்பையும் பார்த்து மக்களின் செல்வன் என பாராட்டினேனே தவிர அவருக்கு படமெல்லாம் நான் சூட்டவில்லை.. தேவையில்லாமல் அவரை உசுப்பேத்திவிடவும் இல்லை” என பதறுகிறார் சீனு ராமசாமி..

சரி.. எப்படி பார்த்தாலும் அடுத்தபடத்தில் டைட்டில் கார்டு போடும்போது தெரிந்துவிட போகிறது..