உறுதியானது ஐ படத்தின் ரிலீஸ் தேதி..!

ai_movie_release_date

விக்ரமின் தொடர் தோல்வி படங்களை அடுத்து ஷங்கரின் இயக்கத்தில் நடித்துள்ள படம்தான் ஐ. இந்த படம் துவங்கிய நாட்களிலிருந்தே படத்தின் மீதான் எதிர்ப்பார்ப்பு அதிகாமிக் கொண்டே போனது. படம் போன வருடமே திரைக்கு வரவேண்டியிருந்தது. ஆனால் ஷங்கரின் குவாலிட்டி எப்படியிருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு படத்தை மெருகேற்றி தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டார்கள்.

நேற்று ஐ படத்தின் சில காட்சிகளை தெலுங்கு பத்திரிக்கையாளர்களுக்கு போட்டு காண்பித்த ஆஸ்கார் ரவிச்சந்திரன். இந்த படத்தின் மீதான் பாசிட்டிவ் விமர்சனங்களை அவர்களிடமிருந்து கேட்டுள்ளார். ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் செப்டம்பர் 15ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த வேலைகள் நடந்து வருகிறது. இதில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் கலந்து கொள்கிறார். மேலும் தெலுங்கு ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடக்கவிருக்கிறது, இதில் ஜாக்கி சான் கலந்து கொள்ளவிருக்கிறார். மேலும் விஜய்யின் கத்தி, தல அஜித் நடிக்கும் படம், விஷாலின் பூஜை படம் தீபாவளிக்கு ரிலீசுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது… தீபாவளிக்கு செம சரவெடி காத்துக்கிட்டிருக்குன்னு சொல்லுங்க…