எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் நாயகனின் அம்மாவாக நடிக்க மாட்டேன்-நடிகை மீனா!


தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. என் ராசாவின் மனசிலே அசை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

திருமணத்திற்கு பிறகு நடிகை மீனா திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது நடிகை மீனாவுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் மீண்டும் மீனா சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் இணைந்து நடிக்கிறார். திருமணம் முடிந்த பின் நடிக்கவரும் கதாநாயகிகளை பெரும்பாலும் அம்மா வேடத்திற்கு தள்ளிவிடுவார்கள்.

ஆனால் நடிகை மீனா எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் கதாநாயகனுக்கு அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *