ஒப்பனிங் பில்டப் சாங் வேணும் ; இயக்குனரிடம் எதிர்நீச்சல் போடும் நாயகன்..!


எதுக்குயா இவ்வளவு சுத்தி வளைச்சு டைட்டில் வைக்கிறீங்க..? அதான் படத்தை பார்த்ததுமே தெரிஞ்சிருச்சே இவங்கதான்னு அப்படிங்கிறீங்களா..? சரி.. விஷயத்துக்கு வர்றோம்.. தனி ஒருவன்’னு மெகா ஹிட் கொடுத்த இயக்குனர் மோகன்ராஜா, அடுத்து பெரிய நடிகர்களை தேடி போகாமல் சிவகார்த்திகேயன் லெவலுக்கு இறங்கி வந்தப்ப எல்ல்லோரும் ஆச்சர்யமா பாத்தாங்க..

இன்னும் சிலபேர், அட சிவகார்த்திகேயனுக்கு நல்ல நேரம் திரும்பவும் ஸ்டார்ட் ஆகிருச்சு.. மோகன்ராஜா படத்துல் நடிக்கிறதால வேற லெவலுக்கு போகப்போறார்னு சொல்ல ஆரம்பிச்சாங்க.. ஆனா தம்பி ‘ரஜினி முருகன்’ பண்றத பார்த்தா தனக்கு கிடைச்சிருகுற வாய்ப்பை நல்லபடியா பயன்படுத்திக்க மாட்டாரு போலத்தான் தெரியுதுன்னு இப்ப ஒரு டாக் ஓடிக்கிட்டு இருக்கு.

என்னடா இப்படி சொல்றாங்கன்னு, விஷயம் என்னான்னு கிளறிப்பார்த்தா ரஜினி முருகன்’ல ஒப்பனிங் சாங் ஹிட்டனதால இந்தபடத்துளையும் ஒரு ஓப்பனிங் சாங் வேணுமுன்னு தம்பி அடம்பிடிச்சராம்.. ஆனா, கதைக்கு தேவைப்படலையே தம்பி அப்புறம் எப்படி நான் வைக்க முடியும்னு இயக்குனர் கைய விரிச்சிட்டாராம்.. அதனால் சிவா தம்பிக்கு மனவருத்தம்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க..