“நான் வர்றேன்.. இப்ப நீ போ” ; கஸ்தூரியை கிளப்பிவிட்ட ரஜினி..!


கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கிண்டலாக கருத்து ரஜினி ரசிகர்களின் கண்டனத்திற்கு ஆளானார் நடிகை கஸ்தூரி.. அதன்பின் நானும் ரஜினி ரசிகை தான்.. அவர் அரசியலுக்கு வரமாட்டேன் என்கிறாரே என்கிற ஆதங்கத்தில் அப்படி பேசினேன் என பல்டி அடித்தார் கஸ்தூரி..

ஆனால் ஆச்சர்யமாக கஸ்தூரியின் பிறந்தநாள் அன்று பிறந்தநாள் பரிசு போல ரஜினியை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கஸ்தூரிக்கு கிடைத்தது.. இந்த சந்திப்பில் தனது சந்தேகங்களை எல்லாம் ரஜினியிடம் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டாராம் கஸ்தூரி. அதுமட்டுமல்ல ஒரு தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கஸ்தூரி, தான் ரஜினியிடம் எப்போ அரசியலுக்கு வர்றீங்க.. சொன்னாத்தான் கிளம்புவேன் என கூறியதாகவும் அதற்கு ரஜினி, “நான் வர்றேன்.. இப்ப நீ போ” என கஸ்தூரியை ஒருவழியாக கிளப்பி அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளார்