சூப்பர்ஸ்டாரின் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் இமான் ?


பேட்ட திரைப்படத்தை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள படம் தர்பார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நயன்தாரா மற்றும் பிரபல நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

தர்பார் திரைப்படத்திற்கு பின் ரஜினியின் 168-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சிவா இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

தற்போது சூப்பர்ஸ்டாரின் புதிய படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளதாக தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.