அக்டோபர் 9-ம் தேதி முதல் ‘இஞ்சி இடுப்பழகி’!

அனுஷ்கா, ஆர்யா நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி படம் வரும் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகிறது.

சோனல் சவுஹான், பிரகாஷ் ராஜ், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் இஞ்சி இடுப்பழகி. இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 4 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

மரகதமணி இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரகாஷ் கோவேலமுடி இயக்கியுள்ளார்.

இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்படி வரும் அக்டோபர் 9-ம் தேதி இந்தப் படம் உலகெங்கும் தமிழ், தெலுங்கில் நேரடியாக வெளியாகிறது.