“இனிமே இப்படிதான்” படத்தை வெளியிடுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

உதய நிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் படங்கள் என்றாலே வரிவிலக்கு மறுக்கப் படுமோ என்கிற அச்சம் நிலவி வருவதால், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களை வரிவிலக்கு சான்றிதழ் பெற்ற பிறகே தன்னிடம் கொடுக்கும் படி உதய நிதி ஸ்டாலின் சொல்கிறாராம்..அப்படித்தான் “தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்” படம் கடைசி நேரத்தில் தான் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதாக அறிவிப்பு வெளியானது.

அதைப்போலவே இனிமே இப்படித்தான் படமும் முதலில் வரிவிலக்கைப் பெற்று விட்டு அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைக்கப் படலாம்.

இதனை உறுதிசெய்யும் விதமாக, பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சந்தானம், ”படம் தயாரிப்பது சுலபம் … வெளியிடுவது கஷ்டம்… இதனை ஒரு தயாரிப்பாளராக இப்பொழுது உணருகிறேன்..” என்று கூற. ” உதயநிதி ஸ்டாலின் தான் உங்கள் நண்பராயிற்றே அவர் படத்தைப் பார்க்க வில்லையா அல்லது வாங்க மறுத்துவிட்டாரா..” என்று மூத்த பத்திரிக்கையாளர் கேட்க, “இல்லை இல்லை அது எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.. அவர் வெளியிடலாம் அல்லது வேறு யாராவது வெளியிடலாம்… படத்தை யார் திரையிடுகிறார்கள் என்பது கடைசி நிமிடத்தில் தானே தெரிகிறது..” என்று பதிலளித்தார்.