ராசியில்லாத வில்லனால் விஜய்க்கு சங்கடம் வருமா..?


அழகிய தமிழ்மகன் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 60வது படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. உடனே சினிமா ஆராய்ச்சியாளர்கள் பலரும் விஜய் படத்தில் ஜெகபதிபாபு நடிப்பது படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூற ஆரம்பித்துள்ளார்கள்..

இதற்கு காரணம் தமிழில் இதற்குமுன் ஜெகபதிபாபு நடித்த தாண்டவம், லிங்கா ஆகிய படங்கள் பிளாப் ஆனதுதான் ராசி, சென்டிமென்ட் பற்றி சொல்கிறார்கள்..

மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஒரு ஜோக் சொல்வார்.. அதாவது முன்பு இருந்த இந்திய அணி வீரர்கள் டெண்டுல்கர் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சமயத்தில் சொல்வார்களாம் “டெண்டுல்கர் தேவையில்லை.. நாங்களே தோற்போம்” என்று. இது உண்மையில்லை.. ஜோக் தான்..

அதுபோல் விஜய் படம் தோற்கவேண்டும் என விதி இருந்தால் அதற்கு இந்த சென்டிமென்ட் எல்லாம் தேவையில்லை.. விஜய் ஒருத்தரே போதும் என்கிறார்கள்.. நடுநிலை சினிமா ஆய்வாளர்கள்.. ஆனால் விஜய் 60வது படம் வெற்றிபெற நாம் ஒரு வாழ்த்தை இப்போதே சொல்லிவிடுவோமே.