5௦க்கும் 1௦௦க்கும் அலைகின்றர்களுக்கு மத்தியில் விஷாலுக்கு மட்டும் 2௦௦௦..!


சண்டக்கோழி-2 படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் சண்டக்கோழி-2 படம் ஆயுத பூஜைக்கு வெளிவருவதாகவும், தென் மாநிலங்களில் 2 ஆயிரம் தியேட்டர்களில் ஒரு திருவிழா கொண்டாட்டம் போல வெளியிடப்பட இருப்பதாகவும் பெருமையுடன் தெரிவித்தார்.

ஏற்கனவே சிறு பட தயாரிப்பாளர்கள் தங்களுக்கு நூறு தியேட்டர்கள் கூட கிடைக்க மாட்டேன் என்கிறது என புலம்பி வருகிறார்கள்.. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் அவ்வப்போது புகாரும் கொடுத்து வருகிறார்கள். ஆனால் இந்தப்பிரச்சனையை தீர்த்துவைக்க வேண்டிய சங்கத்தலைவர் விஷாலே, இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது படத்திற்கு மட்டும் ஆயிரக்கணக்கில் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்வது எந்த விதத்தில் நியாயம் என குமுறுகிறார்கள் சிறு பட தயாரிப்பாளர்கள்.

சங்கத்தின் தலைவராக இருந்துகொண்டு விஷால் தனது படத்தை இப்டி அதிக தியேட்டர்களில் வெளியிடுவது கூட கிட்டத்தட்ட ஒருவகையில் அதிகார துஷ்பிரயோகம் போலத்தான் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.