மாதத்துக்கு ஒரு படம் ; தனுஷுக்கு வந்த சங்கடம்


பொதுவாக ஒரு ஹீரா வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களில் நடித்தாலும் கூட ஒவ்வொரு பட ரிலீசுக்கும் சமமான இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொண்டால் அந்த படங்கள் தப்பிக்கும். ஆனால் வாரத்திற்கு ஒரு படம் அல்லது மாதத்திற்கு ஒரு படம் வெளியானால் ஏதோ ஒன்றுதான் கிளிக் ஆகும், இல்லையென்றால் எல்லாமே குட்டிச்சுவராக போகவும் வாய்ப்புண்டு..

அந்தவகையில் தனுஷ் நடித்துவரும் படங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வெளியாக உள்ளதால் ரசிகர்கள் வேண்டுமானால் உற்சாகத்தில் இருக்கலாம். ஆனால் தனுஷின் கேரியருக்கு அது நல்லதா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். தற்போது தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் வடசென்னை. வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படம் அக்டோபர் 17ல் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்ததாக எனை நோக்கி பாயும் தோட்டா படம், விஜய்யின் சர்காருடன் தீபாவளிக்கு ரிலீஸாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் யுவன் இசையில் தனுஷ் நடித்திருக்கும் மாரி-2 படமும் இந்த வருட இறுதியில் டிசம்பர் 21ல் ரிலீஸாகும் என்று தெரிய வந்துள்ளது

தனுஷ் சரியான திட்டமிடலுடன் இந்தப்படங்களை ஒப்புக்கொண்டிருந்தாலும், இயக்குனர் மற்றும் பட தயாரிப்பு நிறுவனங்களின் குளறுபடி காரணமாக இப்படி ரிலீஸ் தேதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. தனுஷ் தான் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லி நிலைமையை சரி செய்ய வேண்டும்..