மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா நடிகை கஸ்தூரி..?


கடந்த சில வருடங்களாக ஆள் எங்கே இருக்கிறார் என அட்ரஸ் தெரியாத அளவுக்கு இருந்தவர் நடிகை கஸ்தூரி.. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக டுவிட்டரில் சமூகம் சார்ந்த விஷயங்களை தோலிரித்து காட்டுகிறேன் என கூறிக்கொண்டு சர்ச்சைக்குரிய விஷயங்களை டுவீட் செய்து வம்பிலும் மாட்டிக்கொண்டு வருகிறார்.

ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது குறித்து சில நேரம் ஆதரவாக கருத்து சொல்வார்.. கொஞ்ச நாட்கள் கழித்து அவர்களையே கிண்டலடிப்பார். சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி சொல்ல, அதற்கு பலமான எதிர்ப்பு கிளம்ப மன்னிப்பு கோரி ஜகா வாங்கினார். ஏன் இவர் இப்படி குழப்பமான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறார் என்கிற சந்தேகம் பலருக்கு இருந்து வருகிறது.

இந்தநிலையில் தானும் ஒரு நடிகையாக இருந்துகொண்டே தற்போது நடிகை ஸ்ரீதேவி மரணம் அடைந்தது தொடர்பாக ஒரு மோசமான கமெண்ட் ஒன்றை செய்துள்ளார் கஸ்தூரி.

அம்மணி என்ன சொல்லியிருக்கிறார் என்றால், “ஸ்ரீதேவி இறந்ததையொட்டி எல்லா செய்தி சேனல்களும் ஸ்ரீதேவி தொடர்பான பாடல்கள் மற்றும் காட்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. சன்னி லியோன்(நீலப்பட நடிகை) இறந்தால் என்ன மாதிரி இருக்கும் என வியப்பாக உள்ளது” என ஸ்ரீதேவி படத்தையும், சன்னி லியோன் படத்தையும் பதிவுட்டுள்ளார். கூடவே இது பேஸ்புக் பார்வேர்ட் செய்தி என்று பதிவிட்டுள்ளார்

ஆபாச பட நடிகையாக இருந்த சன்னி லியோனுடன் ஸ்ரீதேவியை ஒப்பிட்டு கமென்ட் அடித்ததற்கு கஸ்தூரி மீது கடும் கோபத்தில் இருகின்றனர் ரசிகர்கள். தவிர ஒருவரின் இறப்பில் இவளவு குரூரமாக கமெண்ட் அடிக்கமுடியும் என்றால் நடிகை கஸ்தூரி நிச்சயம் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உளது என பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்..

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *