தமிழ் ‘குயீன்’ ரீமேக் இருக்கா..இல்லையா..? வருமா.. வராதா..?


இந்தியில் ஏதாவது ஒரு படம் ஹிட்டடித்தால் உடனே அடுத்த பிளைட் பிடித்து மும்பைக்குப்பாய் அந்தப்படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் நடிகர் தியாகராஜன். அப்படித்தான் கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த இந்திப் படம் குயின் படத்தை, இந்தியாவின் பல மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் முன்வந்தார்கள்.

அதில் தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை தியாகராஜன் வாங்கியிருந்தார். அதை தமிழில் முதலில் அவரே இயக்குவதாக இருந்தது, கங்கனா நடித்த கேரக்டரில் த்ரிஷா நடிப்பதாக இருந்தது. பின்னர் ரேவதி இயக்குவதாக கூறப்பட்டது. பின் தமன்னா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தமன்னா ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் “குயின் ரீமேக் கைவிடப்படவில்லை. தமன்னா கால்ஷீட்டில் பிரச்னை இருப்பதால் இன்னொரு நடிகை நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்” என்று தயாரிப்பு தரப்பில் கூறுகிறார்கள். எது உண்மையோ, தியாகராஜனுக்குத்தான் வெளிச்சம்..