வரி கட்டாதவர்கள் பொங்குவதில் அர்த்தம் இருக்கா.? ; நடுநிலையாளர்கள் கேள்வி..!


விஜய் தனது படங்களிலும், விஷால் தனக்கு கிடைக்கும் பொது மேடைகளிலும் சமூக அவலங்களை, திரையுலகம் சார்ந்த பிரச்சனைகளை, அதில் அரசின் மெத்தனங்களை, மற்றவர்களின் குற்றங்களை பொங்கியெழுந்து குற்றம் சாட்டி பேசிவருகின்றனர்.. அதனாலேயே அவர்களும், அவர்கள் படங்களும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன.

சமீபத்தில் விஷாலின் வீடு மற்றும் அலவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிடிஎஸ் வரி குழுவினார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவர் 51 லட்சம் வரி செலுத்தாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இது தொடர்பான விசாரணைக்கு கணக்கு புத்தகங்களுடன் ஆஜராகுமாறு விஷாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதேபோல இதற்கு முன்பு விஜய்யின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு முறையான வரி கட்டாமல் இருந்ததும் கண்டுபிடித்ததாகவும் சொல்லப்பட்டது. சினிமாவிலோ மேடையிலோ இருந்து மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வது எளிது. ஆனால் சொல்வதற்கு முன்னால், தாங்கள் சொல்வதற்கான தகுதியுடன் இருக்கிறோமா என பார்த்துவிட்டுத்தானே பொங்கி எழ வேண்டும்” என கேட்கிறார்கள் நடுநிலையாளர்கள்.. நியாயம் தானே..?