ஐஸ்வர்யா ராயை சங்கடப்பட வைக்கும் மாமியார்..!

என்னதான் உலக அழகியாக இருந்தாலும் ஐஸ்வர்யா ராயும் ஒரு வீட்டின் மருமகள் தானே.. அதிலும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் வீட்டு மருமகள் வேறு.. அதனால் தனது புகழ், செல்வாக்கு ஆகியவற்றை தனது குடும்பத்தினரிடம் ஐஸ்வர்யா ராய் வெளிக்காட்டுவதே இல்லை.. குறிப்பாக தனது மாமியார் ஜெயா பச்சனிடம் வெகு பாந்தமாகவே நடந்துகொண்டாலும் சில நேரங்களில் தனது செயல்களால் ஐஸ்வர்யா ராயை சங்கடப்பட வைத்துவிடுகிறாராம் ஜெயா பச்சன்.

அதற்கு படக்கென பேசிவிடும் அவரது நாக்கு தான் காரணம் என்கிறார் பச்சன் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர். சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்டபோது ஐஸ்வர்யா ராயை போட்டோகிராபர்கள் புகைப்படம் எடுக்க முண்டியடித்தபோது அவர்களை கொஞ்சம் கடுமையாகவே பேசிவிட்டாராம். அதிலும் சளைக்காமல் ஒரு புகைப்படக்காரர், நீங்கள் தான் மருமகள் போல இருக்கிறீர்கள் என கூற ‘நீங்கள் யார். ஐஸ்வர்யாவின் பிரண்டா என பட்டென கேட்டுவிட்டாராம்.

இதேபோல நடிகை இஷா தியோலின் வெட்டில் ஒரு விசேசத்துக்காக சென்றிருந்தாராம் ஜெயா பச்சன். அங்கே நிகழ்ச்சியை நடத்த வந்திருந்த புரோகிதர், நிகழ்ச்சியில் கவனம் செலுத்தாமல், ஈஷா தியோலுடன் நெருங்கி செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். அவரை அழைத்த ஜெயா பச்சன், முதல்ல வந்த வேலையை கவனியுங்க’ என கடிந்துகொண்டாராம்.. தானும் ஒருகாலத்தில் நடிகையாக இருந்தோம் என்பதை மறந்து, கட்டுப்பெட்டியான பெண்மணியாகவே மாறிவிட்டார் போலத்தான் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *