ஜெயம் ரவியின் “பூமி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் – சமூக வலைதளங்களில் வைரல்


சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக ஜெயம் ரவி நடிக்கும் படம் ”பூமி”.

விவசாயத்தை மையப்படுத்தி உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி விவசாயியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இமான் இசையமைத்துள்ள இத்திரைபடத்தை இயக்குநர் லஷ்மண் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே ரோமியோ ஜூலியட், போகன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் இது ஜெயம் ரவிக்கு 25வது படமாக அமைந்துள்ளது ரசிகர்களிடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *