ஜோதிகாவின் அடுத்த அதிரடி படம் ‘பொன்மகள் வந்தாள்’ !!


தரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர்களான பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். பிரதாப் போத்தனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

“பொன்மகள் வந்தாள்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எழுதி இயக்குபவர் ஜே.ஜே.ப்ரட்ரிக், இவருக்கு இது முதல்படம். எல்லோராலும் ரசித்துக் கொண்டாடக் கூடிய கதைகளில் ஜோதிகா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் இப்படத்தின் கதையையும் மிகச் சிறப்பாக இயக்குநர் ஜே.ஜே.ப்ரட்ரிக் உருவாக்கி இருக்கிறாராம்.

தன் கேமராக் கண்கள் மூலம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் ராம்ஜி இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இன்று தமிழ்நாட்டு ரசிகர்களின் செவிகளை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா தான் இப்படத்தின் இசை அமைப்பாளர்.படத் தொகுப்பாளராக ரூபனும், ஆர்ட் டைரக்டராக அமரனும் பொறுப்பேற்றுள்ளனர் .
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் படத்தின் பூஜை இன்று காலையில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. பூஜையில் மூத்த நடிகர் சிவக்குமார், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள், ஹரி, பிரம்மா, முத்தையா, T.J.ஞானவேல், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு விநியோகஸ்தர் B.சக்திவேலன் ஆகியோரும்,மற்றும் படத்தின் நட்சத்திரங்கள் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் பெட்ரிக் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *