தாணு கைவிரித்ததால் ரஜினியிடம் தஞ்சம் புகுந்த திருச்சி விநியோகஸ்தர்கள்..!


கபாலி படத்தை திருச்சி ஏரியாவில் திரையிடுவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் செலுத்திய எம்.ஜி. தொகையில் சுமார் 2 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இது சம்பந்தமாக இரு முறை கபாலி பட திருச்சி விநியோகஸ்தர் பிரான்சிஸ் கலைப்புலி தாணுவை நேரில் சந்தித்து பேசியும் நஷ்ட பணத்தை பெற இயலவில்லை.

தாணு பலமுறை உரிய பதில் கூறாமல் தட்டிக்கழிக்கவே, ரஜினிகாந்த்தை நேரடியாக சந்தித்து முறையிட முடிவு செய்த தியேட்டர் உரிமையாளர்கள் 2.0 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் இடத்திற்கு சென்று ரஜினியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர். திருச்சி ஏரியாவில் கபாலி படம் திரையிட தாங்கள் செலுத்திய தொகை, வசூலான தொகை, நஷ்டம் எவ்வளவு என்பதை குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் மனுவில் குறிப்பிட்டுள்ள கோரிக்கை சம்பந்தமாக பரிசீலிப்பதாக தியேட்டர் உரிமையாளர்களிடம் கூறியுள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *