‘அக்கா ஐ லவ் யூ” ; காஜல் அகவர்வாலை அதிரவைத்த ரசிகர்..!


சமீபத்தில் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை தமன்னா மீது ஒரு ரசிகர் செருப்பை வீசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இத்தனைக்கும் அவர் தமன்னாவின் தீவிர ரசிகர் தான். ஆனால் தமன்னா சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில்லை அதனால் தான் அவர் மீது செருப்பை வீசினேன் என்று ஆச்சர்யமான காரணம் ஒன்றை கூறினார் அந்த வாலிபர்.

அந்த நிகழ்வு நடந்து சில நாட்கள் கூட ஆகாத நிலையில், அதே போல ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கும் வேறு ஒரு விஷயம் நடந்துள்ளது. ஆம், சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் அங்கிருந்த ரசிகர்களிடம் மேடையில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, காஜல் அகர்வாலை பார்த்து, அக்கா அக்கா என்று ஒரு இளைஞர் அழைத்தார். அக்கா என்ற சத்தம் வந்த திசையை நோக்கி தலையை திருப்பிய காஜல் அகரவலை பார்த்து அந்த இளைஞர் “அக்கா.. ஐ லவ் யூ” என்று கூறினார். அக்கா என்று கூப்பிட்டதுடன் அக்காவை ஐ லவ் யூ என்று வேறு சொல்கிறானே என காஜல் அதிர்ந்து போனார் காஜல் அகர்வால்..

இதற்கு பதிலாக இவன் செருப்பையே வீசியிருக்கலாம் என நினைத்திருப்பாரோ..? ஆனாலும் கண்டிப்பாக அந்த ரசிகருக்கு நான் ராக்கி கயிறு கட்டாமல் விட மாட்டேன் என்றும் அங்கிருந்தவர்களிடம் கறுவினாராம் காஜல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *