சிங்கப்பூரில் ஜோடியாக மையம் கொண்டுள்ள கமல் பூஜாகுமார்


கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை ஆரம்பித்ததும் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பல இடங்களுக்கு சென்று பொதுமக்களை பார்வையிட்டு அவர்களது குறைகளை கேட்டு வருகிறார். இந்த நிலையில் சிங்கப்பூரில் கமல்ஹாசனும் நடிகை பூஜா குமாரும் ஜாலியாக சுற்றி வரும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது

சிங்கப்பூரில் கமலை அடையாளங்கண்டு யாரோ ஒரு ரசிகர் அவர்களுக்கே தெரியாமல் இந்த புகைப்படத்தை எடுத்து அதை சோஷியல் மீடியாவில் பரப்பி உள்ளார். நடிகை பூஜாகுமார் பல ஆண்டுகளுக்கு பிறகு கமலின் விஸ்வரூபம் படம் மூலம் ரீ என்ட்ரி ஆனார். அதைத்தொடர்ந்து உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 என கமலுடன் இணைந்து மொத்தம் மூன்று படங்களில் நடித்துள்ளார்

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நெருங்கிய நட்பு உருவாகியுள்ளது என்னவோ உண்மை தான். இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ள கமல் அது தொடர்பான வேலைகளுக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார் அப்போது அவருடன் பூஜா குமாரும் சென்றுள்ளார் என சொல்லப்பட்டாலும் இதில் பூஜாகுமாருக்கு என்ன வேலை என்கிற கேள்வியையும் அவரது ரசிகர்கள் எழுப்பி வருகிறார்களாம்.