எங்க.. ரஜினிகிட்ட போய் கேளுங்க பார்ப்போம்..? கங்கை அமரன் காட்டம்..!

இந்த மழைவெள்ளத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்காக இசைஞானி இளையராஜா ஆற்றிய உதவி அபரிமிதமானது.. இயல்பிலேயே இறுக்கமான ஆளான இளையராஜாவுக்குள் இப்படியும் ஒரு ஆள் இருக்கிறார் என்பது இப்போதுதான் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் தெரியவந்துள்ளது. அந்த அளவுக்கு வெள்ள நிவாரண உதவிகளை சுணக்கமின்றி செய்துவந்தார் இளையராஜா.

அதுகுறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, அது தொடர்பாக சீரியஸாக பேசிக்கொண்டிருந்த இளையராஜாவிடம் சேனல் நிருபர் ஒருவர்  ‘பீப் சாங்’ பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுவிட்டார். இடம், பொருள் தெரியால், இங்கிதம் இல்லாமல் கேள்வி கேட்கும் பலர் இன்று நிருபர்கள் போர்வையில் சுற்றி வருகிறார்கள் தானே..

மழை வெள்ளம் குறித்த சீரியசான பிரஸ்மீட்டில், அடுத்து இளையராஜா என்ன திட்டம் வைத்திருக்கிறார் என அது தொடர்பான கேள்விகளை கேட்பதைவிட்டுவிட்டு அவர் இசைத்துறையில் இருக்கிறார் என்பதால் அவரிடம் இந்த கேள்வியை கேட்டாராம் அந்த நிருபர்.. மைக் முன்னாடி நின்றால் உணர்ச்சிகளை கட்டுபடுத்த வேண்டும் என்பது என்ன அவசியமா..? இல்லை ரிப்போர்ட்டர்கள் என்றால் வானத்தில் இருந்து குதித்தவர்களா..? என்னவேண்டுமானாலும் கேட்பார்களா..?

துக்கவீட்டில் கலந்துகொண்ட  விஜயகாந்த் ‘இரங்கல்’ என்பதற்கு பதிலாக தவறுதலாக ‘நன்றி’ என சொன்னதற்கு இந்த மீடியாகார்கள் அவரை என்ன பாடாய் படுத்தினார்கள்.. இப்போது நிருபர்கள் மட்டும் இப்படி இடம் தெரியாமல் கேள்வி கேட்டது எந்தவிதத்தில் சரியாகும்..?

அதனால் தான் உனக்கு அறிவு இருக்காய்யா என நிருபரை பார்த்து இளையராஜா கேட்டார்.. இதை அந்த சூழலின் வெளிப்பாடாகத்தான்  பார்க்கப்பட வேண்டும்.. இந்த விசயத்தில் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், “இளையராஜாவிடம் கேட்ட இதே கேள்வியை, அனிருத்தின் சொந்தக்காரரான ரஜினியிடம் போய் கேட்கவேண்டியதுதானே.. இல்லை தமிழ், தமிழ் என முழங்கிவரும் டி.ராஜேந்தரிடம் போய் கேட்பதுதானே என காட்டமாக கூறியுள்ளார்..

இவர் கூறியதும் கூட சற்று அர்த்தமற்றதுதான். யாரோ ஒருவர் பண்ணியதற்கு யார் யாரிடமோ பொய் என் கருத்து க்ட்கவேன்த்ம்.. அவர்களாக முன் வந்து சொன்னால் சரி.. இல்லையென்றால் விட்டுவிட வேண்டும்.

இளம் நிருபர்கள் சிலர், தனகளது இருப்பை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட விரும்பும் விதமாக, தாங்கள் பார்க்கும் பிரபலங்களிடம் எல்லாம் ‘பீப் சாங்’ பத்தி உங்க கருத்து என்னன்னு சொல்லுங்க என்பது போன்ற அநாகரிகமான கேள்வியை தொடர்ந்து கேட்காமலே இருந்தால் போதும் என்கிறார்கள் சில மூத்த பத்திரிகையாளர்கள்.

உண்மைதான்.. விஜயகாந்த், இளையராஜாவை கோபப்படுத்தும் விதமாக கேள்வி கேட்டு அவர்களை குறை சொல்லும் இது போன்ற சில சோ கால்டு நிருபர்கள் ஜெயலலிதாவிடம் இப்படி கேள்வி கேட்க முன்வருவார்களா..? அப்படி கேட்டால் அவர்கள் உண்மையிலேயே ஆம்பளைகள் தான்..