கர்நாடாகாவில் புதிய கிளை ; சிம்புவுக்கு வைக்கிறாங்க சிலை


நடிகர் சங்கம் முன்னின்று நடத்திய `மௌன அறவழி போராட்டத்தில் கலந்துக் கொள்ள தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறி நடிகர் சிம்பு தி.நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பின்போது, “ஏதோ ஒரு காரணத்திற்கு தான் இந்த போராட்டம் நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும், நானும் தமிழகத்தில் நடந்து வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறேன்” என்று கூறினார் சிம்பு. மேலும் “தற்போது, யாரவது பேசுவது தான் இங்கு பிரச்சனையே… பேசாம இருந்தா எந்த பிரச்னையும் இல்லை. அநீதிக்கு எதிராக அதிகமாக பேசுவது தான் பலருக்கு பிரச்சனையாக இருந்து வருகிறது” என்பது போல் சூசகமாக பேசினார்

மேலும் வன்முறைகளும் போராட்டங்களும் எந்த தீர்வையும் தரப்போவதில்லை என்றும், நம்மை சக உயிராக நினைக்கும் எந்த கர்நாடக மக்களும் நமக்கு தண்ணீர் இல்லை என சொல்லப்போவதில்லை என்றும் சிம்பு தெரிவித்தார் சிம்புவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பினாலும் கர்நாடக மக்களின் ஆதரவை அவருக்கு பெற்று தந்துள்ளது.

அரசியல் காரணங்களால்தான் இந்த தண்ணீர் பிரச்சனை இவ்வளவு காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது. தமிழர்கள் எங்கள் சகோதரர்கள்தான். சிம்புவின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களாயினும் மனிதநேயத்துடன் செயல்பட சிம்புவுக்கு எங்கள் ஆதரவு என்றுமே இருக்கும் என்று கர்நாடக மக்கள் சிம்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *