விஷாலின் படம் தீபாவளிக்கு வெளியாகாததன் பின்னணியில் கார்த்தி..!


சொன்னால் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்வார் விஷால். ஆனால் தற்போது விஷால் நடித்துள்ள ‘கத்திச்சண்டை’ படம் தீபாவளிக்கு வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அதன் ரிலீஸ் தேதி இப்போது நவம்பருக்கு மாற்றப்பட்டு விட்டதாக விஷால் அறிவித்துள்ளார். இதன் பின்னணியில் கார்த்தி இருக்கிறார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

அதாவது வரும் தீபாவளிக்கு கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’ படமும் வெளியாகிறது.. கூடவே சைத்தான், கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களும் வெளியாகின்றன. இதில் விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்துக்கு அனைத்துவிதமான ஆடியன்சும் செல்வார்கள்.. ஜிவி.பிரகாஷுக்கு அப்படியில்லை.

ஆனால் கார்த்தி படமும் தனது படமும் ரிலீசாகும்போது ஆடியன்ஸ் இரண்டாக பிரிவார்கள். அதனால் கலக்சனும் குறையும். அது தனது படத்தை விட அதிக செலவில் எடுக்கப்பட்டுள்ள கார்த்தியின் ‘காஷ்மோரா’வை பாதிக்கும் என்று நினைத்த விஷால் கார்த்தி படம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தனது படத்தை தள்ளிவைத்து விட்டாராம். நடிகர் சங்க தேர்தலில் தனக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருந்த கார்த்திக்கு தான் செலுத்தும் நன்றிக்கடன் என இதை நினைக்கிறாராம் விஷால்.