‘பொட்டை’ன்னா யார் தெரியுமா..? ; கஸ்தூரி கொடுத்த விளக்கம்..!


நடிகை கஸ்தூரி சமீப காலமாக அரசியல் பற்றிய கருத்துக்களை கிண்டலாகவும் ஆவேசமாகவும் கூறி வருகிறார்.. இந்நிலையில் ஒரு டுவிட்டரில் ரசிகர் ஒருவர் கஸ்தூரியை திட்டிவிட்டு அவரை டுவிட்டரில் பிளாக் செய்துவிட்டார். இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த கஸ்தூரி அதனை டுவிட்டரில் வெளியிட்டு அந்த ரசிகரை ‘பொட்டை’ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு மற்றொரு ரசிகர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். உங்களுக்கு ‘பொட்டை’ என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியும் என்று நம்புகிறேன். ஒரு பெண்ணாக இருக்கும் நீங்கள் ஏன் பெண்மையை தாழ்த்துகிறீர்கள்? உங்கள் பெண்ணுரிமைக்கு என்ன ஆச்சு என பாதிக்கப்பட்ட ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பொறுமையாக விளக்கம் சொன்ன நடிகை கஸ்தூரி, ‘பொட்டை’ என்றால் பெண் மட்டுமல்ல. ‘வெற்று’ (பொட்டை கண்) எதுவுமே வளராதது (பொட்டைக்காடு), ‘ஆண்மையற்ற’ என்றும் பொருள் கொள்ள வேண்டும் என விளக்கமளித்துள்ளார்.